ஒரு எண் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அந்த எண், 7 ஆல் வகுபடுமா என்று அறிய, ஓர் எளிய முறை

ஒரு எண் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அந்த எண், 7 ஆல் வகுபடுமா என்று அறிய, ஓர் எளிய முறையை கண்டுபிடித்துள்ளார், கோவையை சேர்ந்த கணித வல்லுனர் உமாதாணு.கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த இவர், ஓய்வு பெற்ற கணித ஆசிரியர். வயது 80ஐ நெருங்கும் நிலையிலும், 'கணிதம் இனிக்கும்' எனும் பெயரில் ஆய்வு மையம் நிறுவி, கணிதம் தொடர்பான பல்வேறு எளிய வழிமுறைகளை கண்டுபிடித்து, பள்ளி மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.கணித வல்லுனர்கள் மத்தியில், இவரது எளிய வழிமுறைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இந்த வரிசையில், 'ஒரு எண் ஏழால் வகுபடுமா' என்று அறியவும், ஒரு எளிய வழிமுறையை தற்போது கண்டுபிடித்துள்ளார் உமாதாணு.இது குறித்து அவர் கூறியதாவது: ஒரு எண், 2, 3, 4, 5, 6, 8, 9 ஆகிய எண்களால் வகுபடுகிறதா என்று கண்டுபிடிக்க, தகுந்த வழிமுறைகள் உள்ளன. ஆனால் 7 ஆல் வகுபடுகிறதா என்று கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. இந்த புதிய கண்டுபிடிப்பின் வாயிலாக, இது எளிதாக சாத்தியமாகியுள்ளது.உதாரணத்துக்கு, 392 என்ற எண், 7 ஆல் வகுபடுமா என்று கண்டுபிடிக்க, அந்த எண்ணின் இறுதியில் உள்ள எண்ணை, 2 ஆல் பெருக்க வேண்டும். பெருக்கினால், 4 வருகிறது. கொடுக்கப்பட்ட எண்ணில், அதாவது 39லிருந்து இந்த 4ஐ கழித்து விட வேண்டும்; 35 கிடைக்கிறது. இது, 7 ஆல் வகுபடுகிறது. ஆகவே, 392 என்ற எண், 7 ஆல் வகுபடுகிறது என்று அறிகிறோம்.இதே போல், 903 என்ற எண், 7 ஆல் வகுபடுமா என்று பார்க்க, இறுதியில் உள்ள 3 என்ற எண்ணை, 2 ஆல் பெருக்க வேண்டும்; 6 கிடைக்கிறது. மீதமுள்ள 90லிருந்து 6 என்ற எண்ணைக் கழித்தால், 84 கிடைக்கிறது. 84 என்ற எண், 7 ஆல் வகுபடுகிறது. ஆகவே, 903 என்ற எண், 7 ஆல் வகுபடுகிறது என அறிய முடிகிறது.இதே வழிமுறையை, எவ்வளவு பெரிய எண்ணுக்கும் பயன்படுத்தி, 7 ஆல் வகுபடுமா என்பதை அறிய முடியும். பள்ளி கல்வித்துறையில் பல புதுமைகளை புகுத்தி வரும் கல்வித்துறை செயலர் மற்றும் அமைச்சர், கணித நுால்களில், இந்த எளிய வழிமுறையை உட்படுத்தினால், மாணவர்கள் பயன்பெறுவர்.இவ்வாறு, உமாதாணு கூறினார்.காரணிப்படுத்தும் முறை, அளவியல்(Mensuration), முக்கோணவியல்(Trigonometry), வடிவியல் கணக்குகளை(Geometry)எளிதாகவும், விரைவாகவும், துல்லியமாகவும் செய்யும் முறை, மூலை மட்டங்களின்(Set squares) முழுமையான பயன்பாடுகள், வகுத்தல் முறையில் கனமூலம் பயன்பாடுகள், மனப்பாடம் செய்யாமல் கணித சூத்திரங்களையும், முக்கோணவியல் விகிதங்களையும் நினைவில் கொள்ளும் முறை உள்ளிட்ட இவரது கண்டுபிடிப்புகள், கணித ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில்,சிறந்த வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... டிசம்பர் 31 வரை கெடு நீட்டிப்பு!

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... டிசம்பர் 31 வரை கெடு நீட்டிப்பு!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம்.

இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நேரடி வரிவிதிப்பு கழகமும் நீட்டித்தது.

இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 31-ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய வருமான வரிக் கணக்கை தாக்கல்செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, அரசின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்த திட்டங்களின் பலன்களையும் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

உலகை ஆட்டிப்படைத்த சிறுமி... ப்ளுவேல் அட்மின் கைது

உலகை ஆட்டிப்படைத்த சிறுமி... ப்ளுவேல் அட்மின் கைது

ப்ளூவேல் விளையாட்டின் பின்னணியில் இருந்து தற்கொலை தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வந்த 17 வயது ரஷ்ய சிறுமியை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சிறுமிதான் உத்தரவுகளுக்கு கீழ்படியாவிட்டால் உறவினர்களையோ, அல்லது நெருக்கமானவர்களையோ கொன்று விடுவதாக பிளூவேல் விளையாட்டை விளையாடி வந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்து வந்தவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மாஸ்கோ அருகே 21 வயது இளைஞர் ஒருவரையும் இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுமியும் ஆர‌ம்பத்தில் பிளூவெல்விளையாடியவர்தான் என்றும், ஆனால் கடைசி கட்ட சவாலை தேர்ந்தெடுக்காமல், மற்றவர்களை தற்கொலைக்கு தூண்டும் அட்மினாக செயல்படும் பணியை தேர்ந்தெடுத்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

A LITTLE FRIEND

That was a bad day for our Mr. Lion King. During his chase to catch a rabbit he sprang into a small bush from where he came out not with the rabbit but with a large thorn in his palm. 

He cried for help. He tried his best to pull out the thorn. He shook his hand, tried to pull out the thorn with his mouth etc. but all his efforts was in vain. The thorn began to smile at Mr. Lion. 

Then he asked other animals for help. But they all feared the lion. So no animals came to help him. 

At last the lion approached the clever fox. The king asked, “Can you pull out the thorn please. I am suffering very much with pain." 

The fox said, “I am not very expert in this task. But I have a little friend who is very expert in this work. I will surely ask him to help you. But I have some demands." 

“What are your demands?" asked the king. 

“It is not just food or money Your Majesty! You should allow me to give you five kicks on your back!" the fox said. 

The lion king asked with surprise and anger “Do you want to kick me? Don’t you know who I am?" 

“I know! I know! But it is not my need to remove thorn from your palm. If you don’t want I am going. Good Bye" said the fox. 

“Hey! Wait! Wait!" said the lion and he began to think for a moment “I am suffering with the pain of the thorn. It has to be pulled out. Let him kick me five times. I just want to remove the thorn. After taking the thorn I will eat up his little friend." 

The fox then began to kick the Lion King with his permission. One, two, three… like that. The fox called his little friend. 

There comes a little porcupine. He pulled out the thorn with great ease. The pain in the palm of the lion was reduced. But his mind became filled with anger, grief and disappointment. What to say! He was very much disappointed in thinking how he can take revenge for the five kicks he got from the fox. How can he eat the porcupine with thousands of quills? At last he had to bow down before the great intelligence of the clever

அரசுப் பள்ளிகளை தனியார் மயமாக்க நீதி ஆயோக் பரிந்துரை: வைகோ கண்டனம்

அரசுப் பள்ளிகளை தனியார் மயமாக்க நீதி ஆயோக் பரிந்துரை: வைகோ கண்டனம்

அரசுப் பள்ளிகளைத் தனியார்மயமாக்க நீதி ஆயோக் பரிந்துரைத்திருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தனியார் மயம், தாராளமயத்தை தீவிரமாக செயல்படுத்த மத்திய அரசுக்கு நிதி ஆயோக் அனைத்துப் பரிந்துரைகளையும் வழங்கி வருகிறது.
வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கூடாது, வேளாண்மைத் துறைக்கான மானியங்கள், உணவுத் துறைக்கான மானியங்களை ரத்து செய்தல், பொது விநியோகத் திட்டத்தைக் கைவிடுதல் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நீதி ஆயோக் அளித்து வருகிறது. 
இவற்றை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது. தற்போது கல்வித் துறையை தனியார் மயமாக்குவதற்கான ஒரு பரிந்துரையை நீதி ஆயோக் மத்திய அரசுக்கு அளித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கான திட்ட அறிக்கையை நீதி ஆயோக் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், 2010-2014 ஆம் ஆண்டில் 13,500 அரசுப் பள்ளிகள் அதிகரித்துள்ளன. எனினும் அரசுப் பள்ளிகளில் ஒரு கோடியே 13 லட்சம் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் ஒரு கோடியே 65 இலட்சம் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
2014-15-ஆம் கல்வி ஆண்டில் 3 லட்சத்து 70 ஆயிரம் பள்ளிகளில் வெறும் 50-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். எனவே சரியாகச் செயல்பட முடியாத நிலையில் உள்ள அரசுப் பள்ளிகளை தனியாருடன் இணைந்து செயல்படுத்த அரசு முன்வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு இப்போது எடுத்துவருவதாகவும் தெரிகிறது. ஏழை, எளிய மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கும் நிலையை அடியோடு ஒழிப்பதற்கு மத்திய அரசு திட்டமிடுவது ஆபத்தானது ஆகும். மத்திய அரசுக்கு நீதி ஆயோக் அளித்து வரும் மக்கள் விரோத பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஜூன்-6 உலாவரும் வதந்திகள்-

ஜூன்-6 உலாவரும் வதந்திகள்-

*#ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் அதிகபட்சம் 5 ஆண்டுகள் மற்றுமே பணியாற்றமுடியும் அடுத்தகல்வி ஆண்டு முதல் எனத்தகவல்.

*#நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஒரே அலகு UNIT ஆக மாற்றம் எனத்தகவல்.

*#கூடுதலாக 12 கல்வி மாவட்டங்கள்உருவாக்கப்படும் எனத்தகவல்.

*#அனைத்துவகை பள்ளிகளில் யோகா ஆசிரியர் நியமனம் எனத்தகவல்.

*#பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரப்படுத்தலாம் எனத்தகவல்.

*#6வது வகுப்பு முதல் கணினியியல் கல்வி ஒரு பாடமாக கட்டாயமாக கொண்டுவரப்படும் எனத்தகவல்.

*#தொடக்கக்கல்வியில் மாவட்டத்தில் உள்ள 1முதல்5 வரையிலும் அனைத்து ஓன்றியங்களையும் இனைத்து மாவட்ட அளவில் ஒரே அலகின் கீழ்கொண்டுவரப்படும் எனத்தகவல்.

*#அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளில் 10% வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத்தகவல்

ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற  வேலைநிறுத்தம் மற்றும் மறியல் முடிவு செய்யப்பட்டது.*

*ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற  வேலைநிறுத்தம் மற்றும் மறியல் முடிவு செய்யப்பட்டது.*

*செப்டம்பர் 7 வட்டார தலைநகரங்களிலும்*
*செப்டம்பர் 8 மாவட்டத் தலைநகரங்களிலும் மறியல் செய்யப்பட வேண்டும்.*

*9&10 சனி ஞாயிறு விடுமுறை.*

*செப்டம்பர் 11 முதல் வேலைநிறுத்தம் தொடரும். மறியல் குறித்து சனிக்கிழமை அன்று அறிவிக்கப்படும்.*

ஒரு அழகான கதை!

ஒரு அழகான கதை!

அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக்  கொண்டிருந்தபோது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும்படிக் கேட்டார்.
அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, "ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே" என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார் வயோதிகர்.
இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் களவாடி சென்று விட்டான்.

சுமார் 10 தினங்கள் கழித்து மீண்டும் அந்த வழியே வந்த அர்சுணன் இதை கேள்விப்பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக்கல்லை கொடுத்து, "இதையாவது பத்திரமாக வைத்திருந்து வாழ்க்கையை சுகமாக களியுங்கள்" என்றான்.
இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றவன் தன் மனைவி, பிள்ளைகளிடம்கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து அவ்வப்போது வீட்டில் யாருமில்லா சமயம்மட்டும் எடுத்துப் பார்த்துக்கொண்டு கவனமாக பாதுகாத்து வந்தான்.
இதையறியாத அவன் மனைவி, ஒருமுறை பரணிலிருந்த அந்த பானையை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள்.
அப்போது பானையை கழுவும் போது அது ஆற்றில் தவறி விழுந்து விட்டது.
அவள் நீரெடுத்து வீட்டில் நுழையும் சமயம், அதைக் கவனித்த வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி, "எங்கே அதிலிருந்த கல்?" என்று மனைவியை கேட்டான்.
ஏதுமறியாத மனைவி நடந்ததைக்கூற, உடனே ஆற்றிற்கு சென்ற அவன் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினான்.

சிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்சுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூற அர்ச்சுனன் கண்ணனிடம்,"இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன்" என்று கூறினார்.
அதை ஆமோதித்த கண்ணனும்,"இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டும் கொடு" என்றார்.
ஆச்சர்யப்பட்டான் அர்சுனன். ஆனாலும் 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, "இதென்ன விந்தை….! வெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விடும் எனக் கேட்டான்…?"

"எனக்கும் தெரியவில்லை..?
என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, அவன் பின்னால் செல்லலாம்" எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர்.

அவன் வீட்டடிற்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் "உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கி கொள்கிறாயா?" எனக் கேட்டான்.
உடனே தனக்குள் யோசித்த இவன் "இந்த 2 சாதாரண காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியைக் கூட போக்காது" என எண்ணி அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்பவிட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கி விட்டான்.
அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை
விடும்முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்து மீனின் வாயில் விரலைவிட்டு சிக்கியிருந்ததை எடுத்தான்.
அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றான்.
ஆம், அவன் மனைவி ஆற்றில் தவறவிட்ட விலையுயர்ந்த கல்தான் அது…!
உடனே சந்தோசத்தின் மிகுதியால் 'என்னிடமே சிக்கி விட்டது' என்று கூச்சலிட்டான்.
அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவனிடம் கொள்ளையடித்த கள்வன் வர அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில் கண்ணனும் அர்ச்சுணனும் அவனைப் பிடித்து விட்டனர்.
அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மட்டுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டான்.
அதை அனைத்தையும் வயோதிகருக்கு கொடுத்து அனுப்பிவிட்டு, ஆச்சர்யப்பட்ட அர்சுணன் கண்ணனிடம், "இது எப்படி சாத்தியம்?" எனக் கேட்க கண்ணனும் சிரித்துக்கொண்டே…
"இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார்.
அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார்.
ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை.
ஆனால் இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்பது தெரிந்தும் தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்ததால்….
அவனை விட்டு சென்ற செல்வம் அவனுக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை" எனக் கூறினார்.

இதைப் போலத்தான் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும்..!

ஆசிரியர் பார்க்க வேண்டிய திரைபடங்கள்

ஆசிரியர் பார்க்க வேண்டிய திரைபடங்கள்

01. The Ron clark story

02. The Marva Collins story

03. Dead poets society
04. To sir with love
05. Beyond the Black board
06. Front of the class
07. The Chorus
08. Mr. Holland’s opus
09. Not one less
10. Lean on me 
11. Good bye Mr. Chips
12. The Great debaters
13. The class
14. The miracle worker
15.  The First Grader
16.  Taare Zameen  par – Hindi
17. Fandry – Marathi 
18.  Manikkakallu – Malayalam 
19. Oomakkuyil  padumpol _ Malayalam 
20.  குற்றங்கடிதல் 
21. அச்சமின்றி.

நன்றி : நண்பர் கலகலவகுப்பறை சிவா

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி :

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.*

நன்றி -:-:-:-:-:-:- .

FLASH NEWS:செப் 7ம் தேதியிலிருந்து நடக்கவிருந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து.

FLASH NEWS:செப் 7ம் தேதியிலிருந்து நடக்கவிருந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து.

மாறாக செப் 7 மற்றும் செப் 8 ம் தேதிகளில் மாநில அளவில் மறியல் போராட்டம் நடத்த முடிவு -ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு.

செப் 7ம் தேதியிலிருந்து நடக்கவிருந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து. மாறாக செப் 7 மற்றும் செப் 8 ம் தேதிகளில் மாநில அளவில் மறியல் போராட்டம் நடத்த முடிவு -ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு.

எளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்

கல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’எமிஸ்’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் புதிய மென்பொருள் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் அனைத்து மாவட்ட ’எமிஸ்’ ஒருங்கிணைப்பாளர்களுக்கான சிறப்பு கூட்டம் இன்று (ஆக.,29) நடக்கிறது.

ஒரு மாணவரின் பெயர் உட்பட முழு விபரம் சேகரிக்கும் வகையில் 2005ம் ஆண்டு முதல் கல்வித்துறையில் ’எமிஸ்’ (எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) பணிகள் நடந்து வருகின்றன. கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் இப்பணி நுாறு சதவீதம் முடிந்து பயன்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இழுபறி நீடிக்கிறது.

குறிப்பாக, பல ஆண்டுகள் நிலுவையில் உள்ள மாணவர்கள் பெயர்களை இணைப்பது, கல்வியாண்டு இடையிலேயே வேறு பள்ளி அல்லது வேறு மாவட்ட பள்ளிகளில் சேர்க்கையாவது, இடைநிற்றல் மாணவரை கண்டறிவது, அரசு உதவிபெறும் பள்ளிகளிலுள்ள சில குளறுபடிகள் என பல காரணங்களால், நுாறு சதவீதத்தை எட்ட முடியாமல் கல்வி அதிகாரிகள் திணறினர்.

மேலும் ’எமிஸ்’ பணிகளை ஒருங்கிணைக்கும் மென்பொருள் பழமையானதாகவும், அதிக விபரங்களை ஏற்று தக்க வைக்கும் திறன் குறைவானதாகவும் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. 

இதனால் சிறு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றாலும், சென்னை தலைமை தொகுப்பு அலுவலகத்தில் மட்டுமே மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. 

இதுபோன்ற காரணங்களால் போதிய தகவல்களை தக்க வைக்கும் வகையிலான நவீன மென்பொருள் உருவாக்க வேண்டும் என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து செயலராக இருந்த உதயச்சந்திரன் மேற்கொண்ட நடவடிக்கையால், புதிய மென்பொருள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பத்து ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இருந்த மென்பொருள் மூலம் ’எமிஸ்’ பணிகளை முடிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர்.இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. மாணவர்கள் எண்ணிக்கையை விட ’எமிஸ்’ எண்கள் எண்ணிக்கை அதிகரித்து புதிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து உதயசந்திரன் எடுத்த நடவடிக்கையால், தற்போது தீர்வு கிடைத்துள்ளது. அந்தந்த மாவட்டத்திலேயே திருத்தம் செய்யும் வசதியும் ஏற்படும். இதன்மூலம் நுாறு சதவீதம் ’எமிஸ்’ பணிகளை எட்ட முடியும். மாணவர்கள் ’ஸ்மார்ட் கார்டு’ வழங்குவதும் எளிதாகும், என்றார்.